போக்கிரி மாமா

போக்கிரி மாமா
.
தேவன் (ஆர். மகாதேவன்)
8-9-1913ல் திருவிடைமருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னர் கும்ப கோணம் அரசாங்கக் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின், 'ஆனந்த விகட'னில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பிறகு 1942ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டு காலம் அப்பத்திரிகையில் பல்வேறு சுவையான கதைகள், கட்டுரைகள் எழுதி சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். நகைச்சுவை நிறைந்த இவருடைய எழுத்துக் களில் 'துப்பறியும் sigma pi b 4^ prime 'விச்சுவுக்குக் கடிதங்கள்', 'ராஜாமணி', 'கோமதியின் காதலன்'- போன்ற படைப்புக்கள் மிகப் பிரபலமானவை.
'தேவன்' தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்து, சிறந்த தொண்டாற்றினார். பத்திரிகை எழுத்துத் துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் அவர் எழுதி வந்தார். 1957-ஆம் ஆண்டு, மே மாதம் s- ஆம் தேதி 'தேவன்' தம்முடைய 44 - a வயதில் இறைவனடி எய்தினார்.