பிருஹன்னளை

பிருஹன்னளை
சுயத்தினை எழுத வயது தேவையா ?
காலமும் வெளியும் இல்லாமல் சூன்யமாக மட்டுமே இந்தப் பிரபஞ்சம் இருந்திருந்தால் வாதை தோன்றியிருக்காதே ? வாதையின் உண்மையான அர்த்தம் நினைவுகள்தானோ ?
ஒவ்வொரு பயணமும் எத்தனையோ விஷயங்களை நம்முள் விதைத்துவிட்டுச் செல்லும் போது மரணத்தினை நோக்கிய பயணங்கள் ஏன் எதையும் செய்வதில்லை ? மரணத்திற்கும் நமது சிருஷ்டிக்கும் எந்த சக்தியும் இல்லையா ?
ஏன் கொண்டாட்டமெனில் கடந்த காலத்தினை நினைத்தே சந்தோஷம் அடைந்து கொண்டு சொந்தங்கள் கொண்டாட்டமாக இருக்கிறோம் எனச் சொல்கின்றனர் ? கொண்டாட்டம் என்ற வார்த்தை நிகழ்காலத்திற்கு உரியதில்லையா ?
இந்த நாவலில் தங்களுக்கு திகில், கருத்துருவாக்கம், காதல், நட்பு போன்ற எதுவும் கிடைக்காது. உங்களுக்கு கிடைக்கப் போவதெல்லாம் சில மனிதர்களின் வாழ்க்கை. அவர்களிடையே ஊசலாடும் உயிருள்ள நிழலின் பயணம். விருப்பமெனில் பயணத்தினை தொடரலாம். ஏதேனும் புதியதாய் கிடைக்கும் எனக் கனவுக் கோட்டையினைக் கட்டியிருந்தீர்களெனில் உங்களுக்கு கிடைக்கப் போவது ஏமாற்றம் மட்டுமே. காரணம் நான் படைப்பாளி இல்லை.