பெரியார்: சுயமரியாதை சமதர்மம்

பெரியார்: சுயமரியாதை சமதர்மம்
எஸ்.வி. ராஜதுரை - வ.கீதா அவர்கள் எழுதியது:
நவீனகாலத் தமிழகம் தோற்றுவித்த மூலச்சிறப்புள்ள சிந்தனையாளரும் சமூகப் புரட்சியாளருமான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பொது வாழ்க்கையின் ஏறத்தாழ 30 ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான ஆராய்ச்சி நூல் இந்தியு தமிழகச் சமுதாயத்தில் பன்னூறண்டுக் காலமாக, ஆளும் வர்க்கங்களின் சாதிகளின் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்தி வந்த கருத்துநிலையை உருவாக்கி, சோழப்பேரரசுக்காலத்திலிருந்து பிரிட்டிஷார் ஆட்சிகாலம் வரையிலும், அதன் பிறகு தேசியப் போராட்டக் காலத்திலும் சமுதாயத்தில் மேலாண்மையை வகிப்பதற்காகப் பார்ப்பனர்களும் பார்பபனியமும் மேற்கொண்ட பல்வேறு வடிவங்களைச் சட்டிக் காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் சாதிகளும் அரசியல் சமூக பண்பாட்டு விடுதலை பெறுவதற்கு வழிகாட்டும் இலட்சியங்களே சுயமரியாதை சமதர்மம் என்பதையும் அந்த இலட்சியங்களை உள்ளீடாக்க கொண்ட தமிழ்நாடு திராவிடநாடு கோரிக்கை பார்ப்பன பனியா ஆதிக்கததைக் தக்கவைப்பதற்காக 1946 இல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசியத்திற்ககும் எதிரானது என்பதையும் விளக்குகிறது