பெப்சி வெற்றிக்கதை

பெப்சி வெற்றிக்கதை
பெப்ஸியும் கோக-கோலாவும் நமக்குத்தான் குளிர்பானங்கள். ஆனால், அந்தத் தொழில்நிறுவனங்களுக்கு அவை பணத்தை அள்ளிக்கொட்டும் அமுதசுரபிகள். பல நாடுகளில் தண்ணீரையும் தாண்டித் தாகத்தைத் தீர்க்கும் முதன்மைப் பானங்களாக இவை அறியப்பட்டிருப்பதால் சின்னக் கடைகளில் தொடங்கி நட்சத்திர விடுதிகள்வரை எல்லா இடங்களிலும் சின்னப் பாட்டில்களில் தொடங்கிப் பெரிய இயந்திரங்கள்வரை எல்லா வடிவங்களிலும் இவை கிடைக்கின்றன, கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றன.
உண்மையில் இவை இரண்டும் சர்க்கரைத் தண்ணீர்தான். ஆனால், ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை, அதை இன்னும் சுவையாக்கும்படி பிரமாதமான விளம்பரம், எங்கும் கிடைக்கிற வசதி, இவை எல்லாம் சேர்ந்து இந்தப் பானங்களையும் இந்த நிறுவனங்களையும் பெரிய வெற்றிபெறச் செய்துள்ளன.
பெப்ஸி நிறுவனத்தின் தொடக்கத்திலிருந்து அதன் வெற்றிக்கதையைச் சுவையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். மிகப் பெரிய வெற்றி பிராண்டாகிய கோக-கோலா-விலிருந்து பெப்ஸி தன்னை எப்படி வேறுபடுத்திக்கொண்டது, மக்களைக் கவர்ந்திழுத்துத் தனக்கென்று ஒரு சந்தையை எப்படி உருவாக்கிக்கொண்டது என்பவற்றையும் விளக்கமாகப் பேசுகிறது.