பட்டினத்தார் ஒரு பார்வை

பட்டினத்தார் ஒரு பார்வை
.பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். இவர் இயற்றிய பாடல்கள், சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றன. அவரைப் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் அவரை ‘பட்டினத்தடிகள்’, ‘பட்டினத்தார்’ என்று அழைக்க அதுவே அவருடைய பெயராக மாறியது.
பட்டினத்தார் எந்த சாதியைச் சேர்ந்தவர்? அவரைப் பற்றி சொல்லப்படும் பல்வேறு மதிப்பீடுகளில் எது சரியானது? உயிர் குறித்தும் உலகம் குறித்தும் இறை குறித்தும் தன் பாடல்களில் அவர் சொல்லியிருப்பது என்ன? தத்துவம், இறை சார்ந்த பாடல்களைப் பாடியவராகவே நாம் பட்டினத்தாரை அறிந்திருக்கிறோம். இந்தப் புத்தகம் பட்டினத்தாரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக, அதிகம் அறியப்படாத பட்டினத்தாரின் அரிய சிந்தனைகளை பழ. கருப்பையா மிக அழகாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறார்.