பசுமைப் பள்ளி

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
பசுமைப் பள்ளி
பசுமைப் பள்ளி - இது சிறார்களுக்கான பள்ளி மட்டுமல்ல. முன்பு சிறார்களாக இருந்த பெரியவர்களும் இப்பள்ளியில் கற்கலாம். வானமே கூரை; திசைகளே சுவர்கள்; புவியே பாடநூல். தாவரங்களும் விலங்குகளும் இயற்கையுமே இப்பள்ளியின் ஆசிரியர்கள். சுற்றுச்சூழல் அறிவியலோடு தமிழ் மொழியின் சூழலியல் பார்வையையும் இணைத்து சொல்லித் தருகிறது பசுமைப் பள்ளி. தொல்காப்பியத்தின் ஆறறிவுச் சிந்தனை, சங்க இலக்கியத்தின் ஐந்திணைப் பகுப்பு, ஐம்பூதம் தத்துவம் ஆகிய அனைத்தையும் அறிவியல் பார்வையில் முன்வைக்கிறது பசுமைப் பள்ளி. இது என்ன தத்துவம் சிந்தனை எல்லாம் வருகிறது என்று யாரும் அஞ்ச வேண்டாம். குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் அவ்வளவு எளிமையாக அமைந்துள்ளது பசுமைப் பள்ளியின் பாடங்கள் என்பதே இதன் சிறப்பு.