பருந்து

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
பருந்து
நிலம் மனித வாழ்வின் எத்தனை முக்கியமான அம்சமென்பதை அமுதா ஆர்த்தியின் இந்தக் கதைகளினூடாக நம்மால் உணரமுடிகிறது. நாஞ்சில் நாட்டின் நிலக்காட்சிகளை அவற்றின் ஈரத்துடன் காட்சிப்படுத்துவதையும் எண்ணற்ற மனித மனங்களின் சித்திரங்களை வரைந்து செல்வதையும் இந்தத் தொகுப்பின் ஆதாரம் எனச் சொல்லலாம். இக்கதைகளுக்குள் புழங்கும் மனிதர்களை யதார்த்த வாழ்வில் நாம் அன்றாடம் சந்தித்தாலும் அவர்களின் குணங்களுக்கான செயல்களுக்கான தனித்த கவனத்தையும் அடையாளத்தையும் உருவாக்குவதன் மூலம் அமுதா ஆர்த்தி அவர்களை அர்த்தப்படுத்துகிறார். நாஞ்சில் வட்டார மொழி அதற்கு அவருக்குப் பெருமளவில் உதவியிருக்கிறது.