பரிவாதினி

பரிவாதினி
.பார்த்திபன் கனவு - சிவகாமியின் சபதம் - என்று அமரர் கல்கியின் வரலாற்று உரை நடைக் காப்பியங்கள் தொடராக வெளிவந்த போது ஆவலுடன் படித்ததன் விளைவாக, மாமல்லபுரம் பலமுறை செல்லும் வேகம் என் இளம் பருவத்தில் எழுந்தது. மாமல்லபுரம் பலமுறை சென்றுவந்த பிறகு சிறிய நூல் ஒன்று எழுதினேன். மாமல்லபுரத்துத் தாக்கம் பெரும் புதினங்களை எழுத என்னுள் ஆவலைத் தூண்டியது. ஆவலின் கன்னி முயற்சி 'பரிவாதினி'.
ஏறத்தாழ பரிவாதினி என் முதல் வரலாற்றுப் புதினம். கூடவே உதய சந்திரனையும் எழுதியதால் இரட்டைக் குழந்தைகள் எனலாம். 'பரிவாதினி' - புதினத்தை எழுதும் போதுதான் பெருங்கனவு உள்ளத்தில் எழுந்தது.
அதிகப் பக்கங்களில் எழுதும் ஆவலிருந்தது. 'பரிவாதினி' பாத்திரம் என் இதயத்தில் எப்போதும் சலங்கை ஒலி எழுப்பிக் கொண்டிருக்கிறது.
காடெல்லாம் கடந்தேன் கடுஞ்சிறை கடந்தேன் ஓடோடி ஓடி வந்தேன் உம்மிடம் ஓடோடி ஆடி வந்தேன்
என்று பரிவாதினி மெல்லப் பாடுவதுபோல், மேடை நாடகத்தில் எழுதி, அதைக் கதாநாயகி பாடுவதாக திருமதி(அப்போது செல்வி) சுதா பாடுவது இன்றும் ஒலுத்துக் கொண்டிருக்கிறது.
நண்பர் ஸுபாவுக்குத்தான் என் ஈடுபாடு புரியும். 'பரிவாதினி'யைப் படித்துப் பெருமூச்சு விடுங்கள்.