பரம(ன்) இரகசியம்

பரம(ன்) இரகசியம்
உங்களுக்குள் உறைந்திருக்கும், சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை இந்த நாவல் ஒருவேளை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடும்...
சித்தர்களால் உருவாக்கப்பட்டு ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கம் இருக்குமிடம் தெரியவர ஒரு கும்பல் அதைக் கடத்திச் சென்று, ஓலைச்சுவடிகளில் இருந்து விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி, விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறது. சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு வந்து சேர்கிறது. அவன் அதற்காக பழைய பகையை மறந்து சிவலிங்கத்தோடு சம்பந்தப்பட்ட தன் குடும்பத்தாருடன் இணைய நேர்கிறது. தொடர்வதோ பரபரப்பான, சுவாரசியமான, திகிலானநிகழ்வுகள். காதல், பாசம்,சஸ்பென்ஸ், அமானுஷ்யம், ஆழ்மனசக்தி, ஆன்மிகம், தத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் இவற்றுடன் கண்கள் அக்னியாய் ஜொலிக்கும் அக்னிநேத்ர சித்தர், பக்தி மட்டுமே தெரிந்த ஓர் வெள்ளந்தி பூசாரி, விஞ்ஞானப் பார்வையிலேயே சிவலிங்கத்தை அணுகும் ஓர் குருஜி போன்ற கதாபாத்திரங்களும் பின்னிப் பிணைகிறார்கள். இத்தனைக்கும் நடுவில் புதிராய் இயங்கும் விசேஷ மானஸ லிங்கம்! பிடிபடுமா பரமனின் ரகசியம்?...