பைசாசம்

பைசாசம்
கோகுல் சேஸாத்ரி அவர்கள் எழுதியது.
இது ஒரு வரலாற்றுப் புதினமாகும்.
சரித்திரக் கதை என்றாலே பக்கம் பக்கமாக விரியும் வர்ணனைகள் பயமுறுத்தும். மன்னர்களையும் அவர்தம் பிரதாபங்களையும் பெரும் அலுப்போடு ஏற்று வாசித்த அனுபவம்தான் முதலில் நினைவுக்கு வரும். இதற்கு நேர் மாறாக சாதாரணக் குடிகளின் வாழ்க்கையை இவ்வளவு எளிமையாக - அவர்கள் மண்ணின் உயிர்ப்போடு எங்கள் முன்னர் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்.
பைசாசம்
பன்னிரண்டாம் நூற்றாண்டு. பாண்டி நாட்டுக் கிராமமான கோளக்குடியில் அமானுஷ்யமான சில சம்பவங்கள் அடுத் தடுத்து அரங்கேறுகின்றன. அவற்றை எதிர்கொள்ள விழையும் பாடிக்காவலன் திருவரங்கனைத் தடுமாறச் செய்வது ஒரு முக்கியமான கேள்வி. இது... மனிதர்களின் வேலையா? அல்லது பிசாசுகளின் லீலையா?
பல்வேறு நுண்ணிய வரலாற்றுத் தகவல் களுடன் அந்தக் காலப் பாண்டி நாட்டின் பண்பாட்டுச் சூழலை அப்படியே படம் பிடிக்கும் விறுவிறுப்பான படைப்பு.