பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா
தமிழ்நாட்டின் அரசியல் உலகில் சென்ற 70 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் கவனத்தைப் பல்வேறு முறைகளில் ஈர்த்து வந்துள்ள பெருமை பெற்றவர் பெரியார் ஈ.வெ.ரா. இந்த 70 ஆண்டுகளில் அவரைத் தூற்றியவர் பலர்; கண்டு அஞ்சியவர் பலர்; போற்றிப்புகழ்ந்து, பின்பற்றி நன்மை அடைந்தவர் பல்லாயிரக்கணக்கான பாமர மக்கள்.
சிறந்த தேசபக்தர், சமுதாயக் கொடுமைகளை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடிய அறப்போர் வீரர். மூடநம்பிக்கை, கடவுள் வழிபாடு , சமய சாத்திரங்களுக்கு அடிமை, ஜாதிப்பற்று, மதப்பற்று இவை அனைத்தும் மக்களை மாக்களாக்கி வைத்திருப்பதைக் கண்டுணர்ந்த ஈ.வெ.ரா. தம் இளமைப் பருவத்திலேயே இவற்றைக் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுத்தார். அவர் வைதிகத்தின் பெரிய வைரி, வேதங்களும் , வேதியர்களும் ஓதி வந்த மடைமையைப் போக்கித் தமிழனுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி, அறிவையும் ஆற்றலையும் அள்ளி அள்ளித் தந்தவர் பெரியார் ஈ.வெ.ரா.