பாசாங்குகளின் அகராதி

Price:
135.00
To order this product by phone : 73 73 73 77 42
பாசாங்குகளின் அகராதி
காலையில் கடனே என்று குக்கரில் வைத்தெடுத்து
சம்பிரதாயத்துக்காக கேசரோலில் வைக்கப்பட்டு
அந்தியில் பார்க்கப்படும் உலர்ந்து விழிக்கும் பருக்கைகளுக்கும்
இந்த வாழ்வுக்கும்
ஒரு வேறுபாடும் இருப்பதில்லை
சில சொற்கள்
அதைக் குழந்தைக்கு நெய்யூற்றிப் பிசைந்த பருப்பு சோறாகக் குழைத்துவிடுகின்றன
செய்ய வேண்டியதெல்லாம்
தேவனே
ஒரு கரண்டி பருப்பு சோற்றுக்கு வழிசெய் என மண்டியிடுவதுதான்