ஓஷோ : ஒரு வாழ்க்கை

ஓஷோ : ஒரு வாழ்க்கை
பாலு சத்யா அவர்கள் எழுதியது.
ஓஷோவின் ஆன்மிகமும் தத்துவமும் தியானமும் மட்டுமல்ல அவர் வாழ்க்கையும் கூட தனித்துவமானதுதான். சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சற்றும் குறை வைக்காமல் நிறை வாழ்வு வாழ்நதவர்.இன்றும் உலகம் முழுவதும் பக்தர்கள் பெரும் பரவசத்துடன் ஓஷோவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு புதிய அமைப்புகள் ஓஷோவின் பெயரைத் தாங்கி செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. ஓஷோவின் உரைகள், புத்தகங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றவருகின்றன. கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை கொண்டவர்களை ஓஷோவை நிராகரிக்கிறார்கள்.அவரது தத்துவத்தை.வாழ்க்கையை. அவர் முன்வைத்த சிந்தனைகளை. ஓஷோவுக்கு இன்னொரு பக்கம் உண்டு. ஓஷோ இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். நிராகரித்திருக்கிறார். காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற தலைப்பில் உரையாற்றி அதிர வைத்திருக்கிறார்.தனக்குத் தானே பகவான் என்று பட்டம் சூட்டிக்கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். ஓஷோவின் ஆசிரமத்தில் வன்முறையும் பாலுறவு வெறியும் மிதமிஞ்சி இருந்ததாக ஆதாரப்பூர்வமான பல செய்திகள் வெளிவந்துள்ளன. ஓஷோ கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கொலை முயற்சியும் அரங்கேறியது. அவர் மரணம் குறி்த்த சர்ச்சைகளும் தீர்ந்த பாடில்லை. என்றாலும் ஓஷோ மீதான ஈர்ப்பு குறையவில்லை. ஓஷோவின் சிந்தனைகள் பரிச்சயமான அளவுக்கு அவர் வாழ்க்கை நமக்குப் பரிப்பயமாகவில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கிறது பாலு சத்யாவின் இந்தப் புத்தகம்.