ஒரே ஒரு புரட்சி

ஒரே ஒரு புரட்சி
திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி பல நாடுகளுக்குச் சென்று உரைகள் பல நிகழ்த்தியுள்ளார்.அவற்றைக் கேட்க பல்லாயிரக்காண மக்கள் கூடுவது வழக்கம்.தனிப்பட்ட முறையிலும் பேட்டிகள் வழியாகவும் அவர்பலரை சந்தித்தார். 1970இல் வெளிவந்த 'ஒரே ஒரு புரட்சி' என்ற புத்தகம் இந்தியா,அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளில் அவர் அளித்த பேட்டிகளின் தொகுப்பாகும்.தினசரி சந்தப்புகளைப் பற்றியும் தியானம்,தன்னைப் சுற்றியுள்ள இயற்கை இவற்றை தவறாது குறித்து வந்தார்.இப்புத்தகம் அவர் மக்களு்டன் நேரடித் தொடர்பு கொள்வது போல்அமைந்துள்ளது.படிப்பவர் உள்ளத்தில் ஒரே மனம் படைத்த இருவர் ஒருமிக்க உறவாடுவது போன்ற உணர்வு ஏற்படுவது இதன் தனிச்சிறப்பு."வாழ்க்கையின் சிக்கல்கள் முழுவதும் ஒரே வேரிலிருந்து விளைந்தவையாகும்", என்பதே அவர் கூறுவது."அவற்றின் விடையும் ஒன்றே".அந்த விடையைத் தாமாகவே தெளிவாகவும் எளிதாகவும் காணும்படி செய்வதே இவர் நமக்களிக்கும் பேருதவி.வாழ்க்கையே முழுமையாக நேர்க்கும் அந்த நொடியிலேயே விடையின் கண்டுபிடிப்பும் அமைகிறது. வாழ்வில் மாற்றங்கள் தேவைதான்.ஆனால் ஒவ்வொரு உள்ளத்தில் மாற்றம் உண்டாக வேண்டும்.இதுவே அவர் கண்ட 'ஒரே ஒரு புரட்சி'.