நிராகரித்தலின் கனவு

நிராகரித்தலின் கனவு
ஸ்ரீதேவியின் முதல் சிறுகதைத் தொகுப்பான
நிராகரித்தலின் கனவு-க்கு முன்னுரை
எழுதுவதில் நான் மிகவும் பெருமைப்
படுகிறேன். இத்தொகுப்பிலுள்ள இருபது
கதைகளும் மனித மனத்தின் உணர்வுகளை,
உணர்வால் ஏற்படும்
செயல்பாடுகளை
மிகவும் மென்மையாகப் படம் பிடித்து
காட்டுகின்றன. வாழ்வின் பிரச்னைகளை,
அதிர்வலைகளாகப்
பிரதிபலிக்காமல்,
மென்மையாக
வருடுவது
பூ
போல்
கூறுவதில்
இவர் சிறப்பு அடங்கி உள்ளது.
இவர் மனதில் பெண்கள் முன்னேற்றம், சுய மதிப்பு,
சொத்துரிமை இவைபற்றி நிறையக் கவலைகள் உள்ளது.
ஆனால் அவை உறவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற
அன்புப் பிணைப்பால் அடங்கிப்
வாழ்வின் அனுபவங்களைக்
ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நடுவில்
குடும்பம் என்ற அமைப்பைத் தவிர்க்க முடியாத அம்சமாகப்
பின்னியிருப்பது எழுத்தாளரின் திறமையைக் காட்டுகிறது.
போகின்றன.
கலைப்பரிமாணத்துடன்
இவரைப் பெண்ணியவாதி என்று கூற முடியாது. ஆனால்
இவர் ஆத்திரமின்றி, கோபமின்றி, அகங்காரமின்றிப்
பெண்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்துகிறார்.
எழுத்தாளர்-உஷா சுப்ரமணி