நெடுமரா நிழல் கதைகள்

நெடுமரா நிழல் கதைகள்
அறுபது வருஷங்களைக் கடந்த வாழ்க்கை ஒரு பெரிய மரமாகத்தான் நம் முன்னே விரிகிறது. அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் நிகழ்ச்சிகளும் அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அசைபோடும் தருணங்களில் நிறைவேறாத ஆசைகளும் எதிர்பாராத முடிவுகளும் முடிவில்லாச் சம்பவங்களும் கற்பனைகளாக உருவெடுத்து மனிதர்களோடும் நிகழ்ச்சிகளோடும் இணைக்கப்பெற்று சுவாரஸ்யமான கதைகளாகின்றன.
இந்த நெடுமர நிழல் சில சமயங்களில் அசைபோடும் மனதுக்கு இனிப்பாகவும் வெறு தருணங்களில் அந்த நெடுமர நிழல் தரும் ஞானமாகவும் ஆகும் ரசவாதத்தை உணர முடிகிறது.
அந்த நிழலில் நம்மைக் கடந்து போனவர்களிலும் பார்த்த சம்பவங்களிலும் கற்பனையைச் சேர்த்து ரசவாதம் செய்யும்போது நல்ல கதைகள் இருப்பதை உணர முடிகிறது.
இனிப்போ காரமோ ஞானமோ இந்தக் கதைகளைப் படிக்கவும் ரசித்துவிட்டுப்போகவும் நேரமும் மனமும் மட்டும்தானே வேண்டும்!