நட்ட கல்லைத் தெய்வமென்று

Price:
190.00
To order this product by phone : 73 73 73 77 42
நட்ட கல்லைத் தெய்வமென்று
‘அறிவை அடையளம் காட்டுகிறேன்; என்னைப் பின்செல்’ என்று அழைக்கிறவர்கள் எப்போதும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள், இப்போது அழைக்கிறவர்களோ அறிவின் திருவுருவாய், அறிவின் அடைவாய்க்கூடத் தங்களையே அடையாளம் காட்டி நிற்கிறார்கள்.
எப்போதும்போல் இப்போதும் அழைப்பை நம்பி ஏற்பவர்களுக்கோவெனில் அழைப்பவர்களையும் அடையாளம் தெரியவில்லை.
அடையாளம் காட்டாமல் ஏமாற்றுகிறவர்கள் – அடையாளம் தெரியாமல் ஏமாந்தவர்கள் ஆகிய தரப்புகளுக்கு இடையில் நிகழும் கூவல்கள்பற்றியவை, கதை இடையிட்ட இந்தச் சிறு கட்டுரைகள்.
கட்டுரைத்துக் கூவியவன் வள்ளுவன், மணிவாசகன், திருமூலன், பட்டினத்தான், தாயுமானவன், சிவவாக்கியன், வள்ளல் என்றினைய மூத்தோரின் பாட்டெடுத்தும் கூவுகிறான் என்பதால் இவை கதையும் பாட்டும் இடையிட்ட கட்டுரைகள்.