நரகத்தில் ஒரு பருவகாலம்

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
நரகத்தில் ஒரு பருவகாலம்
ஒரு புராணக்கதையை ஒத்தது ஆர்தர் ரைம்போவின் வாழ்க்கை, குறுகிய, ஆனால் தீவிரம் நிரம்பிய வாழ்க்கை. தன்னை ஒரு சாகசக்காரன் என்றே அவர் நம்பினார். எளிமையான பாதைகளைப் புறக்கணித்து விளிம்புகளில் பயணிப்பதையே பெரிதும் தேர்ந்தெடுத்தார். சமரசம் செய்து கொள்ளாத மனத்திடம்; புலன்களின் சிதைவு; போதை மருந்துகள்; ஒருபால் புணர்ச்சி; ஆயுதக்கடத்தல்; வெவ்வேறு நிலங்களினூடான பயணம்; எல்லாவற்றுக்கும் மேலாக, இருபத்து ஒன்றாம் வயதுக்குள் எழுதிய கவிதைகளின் நம்பவியலாத முதிர்ச்சி; அதனைத் தொடர்ந்து தன்னுடைய கவிதைகளைக் கைவிட்டுப் பிறகு ஒருநாளும் அவற்றைப் பற்றி உரையாடாத பிடிவாதம் – இவையெல்லாம் சேர்ந்து ஒரு இதிகாச நாயகனின் பிம்பத்தை வரலாற்றில் ரைம்போவுக்குத் தருகின்றன. ஆனால், உயிரோடு இருந்திருந்தால் இதையும் அவர் மறுத்திருக்கவே செய்வார் எனத் தோன்றுகிறது.