நம்மை நாமே செதுக்குவோம்

நம்மை நாமே செதுக்குவோம்
இளசை சுந்தரம் அவர்கள் எழுதியது.
எட்டையப்புரத்தைச் சேர்ந்த இவர் எம்.ஏ பி.ஏட் படித்தவர்
பல்வேறு வானொலி நிலையங்களில் பணியாற்றிவி்ட்டு மதுரை வானொலியின் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்
பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற இவரது சிறுகதைகள் சாதகப் பறவைகள் நூலாகி மதுரை காமராசர் பல்கலைகழகத்திலும் மற்றும் சில தன்னாட்சி கல்லூரிகளிலும் பாடநூலாக ஆக்கப்பட்டது
திருச்சி வானொலியில் பல்லாண்டு காலமாக நகைச்சுவை அரங்கம் நடத்தியவர் தொலைக்காட்சியிலும் நடத்தி வருபவர் இவை நகைச்சுவை நந்தவனம் என்ற நூலாகவும் நகைச்சுவை தர்பார் என்ற ஒலிநாடாவாகவும் வெளிவந்துள்ளன
பாரதியாராக வேடமிட்டு தமிழகத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பாரதியார் இன்று வந்தால் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இதற்காக பாரதி பணிச் செல்வர் எனற விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது
அண்ணாமலை பல்கலைகழகத்தில் பாரதியார் அறக்கட்டளை சொற்பொழிவு நடத்தியவர்
ஆன்மீகச் சொற்பொழிவாளர் பட்டிமன்ற நடுவர் நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர்
வானொலிச் சாதனையாக மொழியாக்கும் ஒலிகள் என்ற வானொலி நிகழ்ச்சிக்கு தேசிய அளவிலான ஆகாஷ் வாணி விருது பெற்றவர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் வழங்கிய கலைச்செல்வர் விருது திருமுக கிருபானந்த வாரியர் வழங்கிய நகைச்சுவை மாமன்னர் விருது போன்ற 60க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றவர்
இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை வானொலியில் வழங்கி வந்தார் அவை நூல்களாக வெளிவந்துள்ளன இப்போது மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலையில் சொல்லோவியம் நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்
அண்மையில் பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாரதியார் 125வது பிறந்த நாள் விழாவில் பாரதியாக வேடமிட்டு தோன்றி இன்றைய பாரதி என்று பட்டம் பெற்றுள்ளார்...