நடிப்பு

Price:
145.00
To order this product by phone : 73 73 73 77 42
நடிப்பு
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்’. ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும்’. அப்பொருள் மெய்ய்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை. மெய்ப் பொருளுக்கான தோட்டமே அறிவு! ‘யார் யார் வாய்க்’ கேட்கிற எல்லாக் கருத்துகளுடனும் ஒருவர் முரணுகை கொள்கிறபோதும். அவற்றை எல்லாம் வெளியிடவே கூடாது என்று அதிகார அகந்தை கொள்ளாமல், அவற்றை எதிர்கொள்கிற அழகில்தான். அதனுள் ஒளிந்திருக்கும் உண்மையானது தன் கோலமுகங்காட்டும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை எனக்குண்டு. இதுதான் ‘நூறு பூக்கள் மபரட்டும் நூறு சிந்தனைகள் மோதட்டும்’ என்று தோழர் மாவோவின் மொழியில் பன்முக அங்கீகாரத்திற்கான புகழ் மொழியாகியுள்ளது. வளர்ச்சி என்பது ஆக்கபூர்மக் கருத்தியல் மோதுகையிலேயே உருவாகிறது என்பதுதான் இயங்கியல். வாசியுங்கள்... விவாதியுங்கள்... என்னை வளர்த்தெடுங்கள்!