மெளனம் கலையட்டும்!

மெளனம் கலையட்டும்!
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்களிடம் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி முதலில் கெஞ்சுகிறார்; பிறகு அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகச் சொல்லி அமைதிப்படுத்த முயல்கிறார்;'நான் எழுந்து நின்றால் நீங்கள் இருக்கையில் அமரவேண்டும்' என்று மரபுகளை நினைவூட்டுகிறார்; 'இப்படித்தான் நீங்கள் நடந்துகொள்வீர்கள் என்றால் என்னை இந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்துவிடுங்கள்' என்று அவர்களுடைய அடிமனதைத் தொட்டுப் பார்க்கிறார். எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில் அவரிடமிருந்து கடுமையான சொற்கள் வந்து விழுகின்றன. 'ஜனநாயகத்தைக் கொன்று குழிதோண்டிய புதைப்பதற்கு நீங்கள் கூடுதல் நேரம் உழைக்கிறீர்கள்' என்று மாண்புமிகு உறுப்பினர்களைப் பார்த்துக் கூறுகிறார்.'உங்களுக்கு அவையின் விதிகள் அடங்கிய புத்தகத்தை எடுத்துச் சென்று காந்தி சிலை முன்பாகத் தீயிட்டுப் பொசுக்குங்கள்' என்று வேதனைப் படுகிறார்.தொலைக்காட்சி கேமாரக்களை நிறுத்திச் சொல்கிறார்; விளக்குகளை அணைக்குமாறு ஆணையிடுகிறார். ஆனால், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் இதற்கெல்லாம் செவிசாய்ப்பவர்கள் அல்லர். எந்த விதியும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று ஆணித்தரமாக வரிப்பணம் ஒவ்வொரு நொடியும் வீணடிக்கப்படுகிறது.