மூட்டு வலி - எலும்பு முறிவு

மூட்டு வலி - எலும்பு முறிவு
சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும்,எலும்பு மற்றும் மூட்டுகளில் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்னைகளும்,அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளும் என்னென்ன? பாதிக்கப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு மையங்களில் கிடைக்கக்கூடிய வசதி,வாய்ப்புகள் என்னென்ன? விபத்துகள் மற்றும் எலும்பு முறிவின் வகைகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் என்னென்ன? விபத்து மற்றும் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? - இவை தவிர, எலும்பு மற்றும் மூட்டு வலி -சாலை விபத்து மற்றும் எலும்பு முறிவு தொடர்பாக இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் டாக்டர் ஆர். ரகுநாதன், 1997-ல் சென்னையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.2003-ல், எடின்பரோ ராயல் கல்லூரியின் MRCS பட்டம் பெற்ற இவர், 2005-ல் லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியில் எலும்பு மற்றும் மூட்டுவலி தொடர்பான மேற்படிப்பை முடித்தவர். பல வெளிநாட்டு மருத்துவமனைகளில் பணியாற்றியிருக்கிறார்.