மிஸ் ராதா

மிஸ் ராதா
பெண்கள் அடங்கிக் கிடந்த அந்த காலத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தனர் புதுமைப் பெண்கள்.இந்த றுநூலின் நாயகி ராதா அதில் ஒருத்தி.கல்லூரி காலத்தில் அரும்பும் காதல் மலர்லிட்டு மலர் தாவும் வண்டாக மனங்கள் ,வெளியே தைரியம்...உள்ளே நடுக்கம் என்று நுடுய்கும் ஆண்குலம்,பணமும் சுற்றமும் இந்த கல்லூரிப் பறவைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாறுதல்பள் என மயக்கும் மசாலா வலாயோடு நகர்கிறது இந்நாவல்.துறுதுறு காதல் சம்பவங்களுக்கிடையே மர்மமான பிளாஷ்பேக் ஓடிக்கொண்டு இருக்கிறது.காதல் காட்சிகளில் நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் ஒருவர் சளைக்காமல் பேசுகிற வசனங்களின் நறுக்குத் தெறிப்பில் ,சுவாரஸ்யமான யூத்பிலிம் பார்த்த உணர்வு.பெண்ணின் அழகுக்கு முன் எத்தகைய ஆணும் அடிமை தான் என்று நதியின் ஓட்டம் போல் இயல்பான நடையில் படம் பிடித்துக் காட்டி இருக்கிற கொத்தமங்களம் சுப்பு சினிமப அனுவத்தை புகுத்தி காட்சி அமைப்பபை திரைக்கதை போலவே நகர்த்திச் செல்கிறார்.40 வருடங்களுக்கு முன் விகமஷடனில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நூல் இது!