மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் என்று அழைக்கப்படும் பேக்கேஜில் வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட், அவுட்லுக், அக்ஸஸ் போன்ற பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. இவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களான வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்றவற்றை மட்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் புத்தகமாக உருவாக்க எண்ணினோம். அதற்கு கம்ப்யூட்டர் ரெசிப்பி என்று புதுமையான பெயர் வைத்தோம். இந்த கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 புத்தகம் லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். டேட்டாவை ஸ்டோர் செய்வதற்கும் முறைப்படுத்துவதற்கும் தேவைக்கேற்றாற்போல் தகவல்களை மாற்றிக்கொள்வதற்கும் பயன்படுவது எக்ஸல் சாஃப்ட்வேர். புள்ளிவிவரக் கணக்கீடுகள் செய்யவும், வரைபடங்கள் தயாரிக்கவும் மட்டுமல்லாது ஓவியம்கூட இதில் வரைய முடியும் என்று 73 வயது ஜப்பானிய ஓவியர் ஒருவர் நிரூபித்திருக்கிறார்! ஃபில்டர், சார்டிங், மேக்ரோஸ், ஃபங்ஷன்ஸ், ஃபார்முலாஸ் என்று பலவகையான செயல்களை எப்படிச் செய்வது என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. எக்ஸல்&ஐப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் எக்ஸல் கற்றுக்கொண்டால் அவர்களும் ஏகலைவன் ஆக முடியும் என்பதில் ஐயமில்லை!