மேற்குச்சாளரம்

மேற்குச்சாளரம்
இலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதம் மேற்குச் சன்னலை திறந்து வைத்திரக்கிறோம்.18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொணடடுவந்து குவித்தது.ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும்.இதவும் அத்தகைய ஒரு முயற்சி.ஆனால் வழக்கமாக அது அதிகமாகப் பேசப்படுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம்.இந்நூல் பரவலாகப் பேசப்படாத நூல்களைப் பற்றி பேசுகிறத. 19ஆம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன்(மேரி கொரெல்லி) முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட்(கார்ல் சகன்) வரை , ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபா ஆப்) முதல் மத்திய்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது. இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது.அவற்றின் மீது வாசக திறக்கும்படி சில அவதானிப்புகளை நிகழ்த்துகிறது.