மென்கலைகள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
மென்கலைகள்
‘ஆய கலைகள் 64’ என்று சொல்வார்கள். நடனம். பாட்டு, தையல் வேலை, விடுகதை, வசனம், தோட்ட வேலை என்று தொடர்கிற இந்தக் கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர்களுக்குதான், அந்தக் காலத்தில் மரியாதை.
அன்றைக்கு ‘ஆய கலைகள்’ என்றால், இன்றைக்கு ‘மென் கலைகள்’, ஆங்கிலத்தில் ‘soft skills’’ என்று அழைக்கப்படும் இந்த நவீன கலைகள்தான், இன்றைய நாகரிக வாழ்க்கையில் ஒரு தனி நபரின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.
பலரும் நினைப்பதுபோல், இந்த மென்கலைகள் அலுவலகச் சூழலுக்கு மட்டும் சொந்தமில்லை. வீட்டிலும், நமது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களிலும்கூட இவற்றைப் பயன்படுத்தி பெரிய அளவில் பயன்பெற முடியும்.
நவீன வெற்றிச் சூத்திரங்களான இந்த மென்கலைகளை எளிய மொழியில், அழகான உதாரணங்கள், பயிற்சிகளுடன் சொல்லித்தரும் பயனுள்ள கையேடு, இந்தப் புத்தகம்!