மேல் மாடி

மேல் மாடி
மனித உடல் பாகங்களில் அற்புதமானது,அதிசயமானது மூளை. சுமார் 1500 கிராம் எடையுள்ள மூளைதான், ஆறடி உயரம் உள்ள மனிதனை ஆட்டிப் படைக்கிறது.உணர்ச்சிகளைத் தூண்டுவதும் இதுதான்.கட்டுப்படுத்துவதும் இதுதான். தகவல்களைப் பதியவைத்துக்கொள்வதும் இதுதான். தக்க நேரத்தில் நினைவூட்டுவதும் இதுதான்.மனசும் இதுதான். அறிவும் இதுதான். மனச்சாட்சியும் இதுதான். ஆக, மனிதனைப் பொறுத்தவரை எல்லாமாக இருப்பது மூளை. ஒரு மனிதன் முழுமையானவனாக இருக்க, மூளை ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். இந்த மூளையில் ஒரு நரம்பு பிசகினாலும் ஆபத்துதான். மூளையில் ஏற்படும் ஒரு சிறு பாதிப்பு, பக்கவாதம், வலிப்பு நோய்,தூக்கத்தில் நடக்கும் வியாதி, மனச்சிதைவு,மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி,பார்க்கின்ஸன்ஸ் நோய் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். சில சமயம், கோமா நிலைக்குக்கூட கொண்டுபோய்விட்டுவிடும். இதுமட்டுமல்ல, ஸ்பாஸ்டிக் குழந்தைகள் எனப்படும் வயதுக்குரிய மன வளர்ச்சி இல்லாமல் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் காரணகர்த்தா மூளைதான்.இன்னும் முழுமையாக ஆராயப்படாத மூளை பற்றிய அத்தனை தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.