மயிலிறகு வாசிக்கும் புத்தகம்

0 reviews  

Author: ஆசு

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மயிலிறகு வாசிக்கும் புத்தகம்

இருளை அறிய ஒளி வேண்டும். ஒளியை அறிய இருள் வேண்டும். 'விளக்குத் திரி காற்றாகிச் சுடர் தருகிறது. காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு' என்றுணர பிரபஞ்சத்தில் திளைத்த மனம் வேண்டும். மனம் பல்லாயிரம் படிமங்களால் நிறைந்து துடிக்கிறது. மனத்திற்கான படிமமோ சிந்திக்கும் கணத்திலேயே மாறிவிடுகிறது. அந்த மனச் சாளரத்தின் மாயச் சித்திரங்கள் ஆசுவின் சொற்களில் கலைந்து கலைந்து உருக் கொள்கின்றன. வளையத்திற்குள் நெளியும் வாழ்க்கை; வட்டத்தை மீறிய மணித்துளிகள் இவற்றிடை காற்றுப் பொம்மைக்குள் ஒளிந்து நடனமிடும் மனதின் மௌன உரையாடல் இது. இந்த உரைச் சித்திரங்களில் 'திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சியளிக்கிறது; என்ற நகுலனின் கண்கள் அங்கங்கே என்னை ஊடுருவி உற்றுக் கவனிக்கின்றன.