மாயாவதி ஒரு வாழ்க்கை

மாயாவதி ஒரு வாழ்க்கை
பெண்.தவிரவும் ஒரு தலித். எனவே அரசியல் ரீதயாகவும் சமூக ரீதியாகவும் தொடர்ச்சியான அடக்கு முறைகளை மாயாவதி சந்திக்கவேண்டிவந்தது.அடிதடிகளும் ஆர்ப்பாட்டங்களும் அடாவடிகளும் நிறைந்த அரசியல் களத்தில் கால் பதிப்பதே சவாலான காரியம் என்னும் நிலையில் அசாத்தியத் துணிச்சலுடன் போராடிய மாயாவதி இன்று நாட்டின் மிகப்பெரும் மாநிலத்தின் முதல்வர்.குருட்டு அதிர்ஷ்டத்தின் விளைவு அல்ல இது.பெரும் திரளான மக்களை ஈர்க்காமல் அவர்களிடம் நம்பிக்கையை விதைக்காமல் அவர்கள் ஆதரவைப் பெறாமல் இந்த வெற்றியை அவரால் ஈட்டியிருக்க முடியாது.என்றாவது ஒரு நான் இந்தியாவின் பிரதமராக நான் வருவேன்.அதற்கான தகுதி எனக்கு இருக்கிறது.தயக்கம் சிறிதும் இன்றி வெளிப்படையாக பல முறை அறிவித்திருக்கிறார் மாயாவதி.அவரின் பிரதமர் கனவு இன்று வரை வெற்றி பெறவில்லை என்பது நிஜம்.ஆனாலும் இந்திய அரசியல் களத்தின் தவிர்க்க இயலாத ஒரு சக்தியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் மாயாவதி.அந்த வகையில் அவரது வாழ்க்கையும் அரசியல் பங்களிப்பும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.