மாயமான் வேட்டை
மாயமான் வேட்டை
அரசியலில் நாயகன் படும் பாட்டை அசுர பாய்ச்சலில்எழுதியுள்ள நாவல் இது....
மாயமான் என்றால் அலைக்கழித்தே O_{3} தீரும். இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்; மனிதர்கள் மாறலாம்; மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை.
இந்தக் காலத்துக்கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல், அவதாரத்தின் அரிதாரம் தேர்தல், ஆ, அந்தச் சமயங்களில் மட்டும் அது எட்டிப்பார்க்கத் தவறுவதே இல்லை. பொய்க் கனவுகளைக் காண வைக் கிறது. வெற்றுக் கோஷங்களை நம்ப வைக்கிறது. இதோ, அதோ என்று அவதார புருஷர்களான வாக்காள ராமர்களை அலைக்கழித்துவிட்டுப் g_{L} போயேவிடுகிறது.
வண்ண வண்ணக் கனவுகளைச் சுமந்து கொண்டு, சொந்த தேசத்துக்கு வந்து சேரும் ஒருவனை, துரத்தித் துரத்தி வேட்டையாடி அவனது அத்தனைக் கனவுகளையும் ஒன்று விடாமல் கலைத்துப்போடும் மாயமானின் சாமர்த்திய வேட்டையை இதில் நீங்கள் பார்க்கலாம்.
வா வா என்கிறது அரசியல். வந்து சேர்ந்தவன் படும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்நாவல், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து நிகழ்த்தி இருக்கும் இன்னொரு அசுரப் பாய்ச்சல்.
மாயமான் வேட்டை - Product Reviews
No reviews available