மருது காவியம் (கவிதை வடிவில் வரலாறு)

மருது காவியம் (கவிதை வடிவில் வரலாறு)
மருது மக்களின் ஆட்சித் திறம், போர்க்கலை உக்தி , சமூக நல்லிணக்கனம், சமய நல்லிணக்கம், விதவைகள் மறுமணம், நீர் மேலாண்மை , நெல் வேளாண்மை, நிர்வாக மேலாண்மை, சுதேசி மன்னர்களை இனைத்து அமைத்த தென்னிந்திய தீபகற்ப பேரவை , தமிழகத்தின் மதல் பிரகடனமான ஜம்பு தீபகற்ப பிரகடனம்தன்மானம் , மண்மானம்,தமிழுனர்வு நட்புக்காத்தல், நாடு போற்றல் போன்ற செய்திகளோடு மருது மன்னர்களோடு விடுதலை போராளிகள் 500 பேரை திருப்பத்தூர் வீதிகளில் தூக்கிலிட்ட ரணங்களையும் , சொந்த பந்தங்களை தீவாந்திரம் அனுப்பிய கொடுமைகளையும் விவரிக்கும் இந்நூல் மண் மானத்தையும் தன் மானத்தையும் மனதுக்குள் மலரச் செய்கிறது. கவிஞர் பொற்கைப்பாண்டியன் வீரம் மிக்க ஒரு செம்மண் பூமியின் செவ்விலக்கியவாதி,புல்வாய்க்கரை பிறந்த இந்தப் பொற்கைப்பாண்டியன், தமிழ் என்னும் வரலாற்று நதிக்குப் புதிதாய்க் கரை அமைக்கும் இலக்கிய முயற்சியின் இனிய முன்னோடி. மரபுக் கவிதையின் இரத்தநாளமாக விளங்கும் இவரின் பேனாமுனையிலிருந்து 'மருது காவியம்' என்னும் வசன காவியம் வளரி வீசுகிறது.