மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்
மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்
சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங்
திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக்
குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும்.
மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள்
பலர். ஆனால் எண்ணற்ற நிறுவனங்கள் தினம் தினம் இதனைத் தவறாகச் செய்து கையைச்
சுட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.
மார்க்கெட்டிங்கில் எப்படிப்பட்ட தவறுகள் எல்லாம் நடக்கின்றன என்பதை மிக அழகாக நமக்கு
விளக்குகிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. சாதாரணத் தவறுகள் அல்ல இவை. மாபாதகங்கள். இந்தப்
பாதகச் செயல்களைச் செய்வோருக்கு மீளாத பாவம் வந்துசேரும். இந்தத் தவறுகளால் அவர்களுடைய
நிறுவனங்களுக்குக் கடுமையான நஷ்டம் ஏற்படலாம். ஏன், நிறுவனத்தின் எதிர்காலமே
பாதிக்கப்படலாம். எனவே, இவற்றைத் தவிர்க்க முயல வேண்டும்.
இந்தப் பஞ்ச மாபாதகங்களைப் பற்றிப் புரிந்துகொண்டால், வெற்றி நிச்சயம் என்று சொல்லமுடியாது.
குறைந்தபட்சம் தோல்வியைத் தவிர்க்கமுடியும் என்று சொல்லலாம்.
சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் முந்தைய நூல்களான ‘மார்க்கெட்டிங் மாயாஜாலம்’, ‘விளம்பர மாயாஜாலம்’
ஆகியவை இந்த நிர்வாகத் துறைகளில் தமிழில் வெளிவந்த முதல் நூல்கள். பல எம்.பி.ஏ கல்லூரிகளில்
மாணவர்களுக்குப் பரிந்துரை செய்யப்படும் புத்தகங்களாக உள்ளன. இந்த நூலும் அதே
வரிசையில் வைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம், மார்க்கெட்டிங் துறையில் வேலை
செய்வோருக்கு ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்பதிலும் ஐயம் இல்லை.
மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Product Reviews
No reviews available