மரணம் துரத்தும் மஞ்சு

Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
மரணம் துரத்தும் மஞ்சு
.சிறுவர்களின் உலகில் இன்றியமையாத ஒன்று காமிக்ஸ்! தமிழில் நேரடி காமிக்ஸ் இல்லையே... என்கிற குறையைத் தீர்த்துவைக்கும் விதமாக, சுட்டி விகடன் தொடங்கிய முயற்சியின் விளைவு இந்த காமிக்ஸ். அதிரடியாக வெளிவந்த வண்ணமயமான காமிக்ஸ் பக்கங்கள், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்து, ரசிக்கவைத்தன. மேற்கத்திய காமிக்ஸின் தாக்கம் இல்லாமல், ஆனால், அவற்றின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையாமல், எல்லாப் பக்கங்களும் வண்ணமயமாக உருவாக்கப்பட்டது இந்தப் புத்தகம். விறுவிறுப்பும் மர்மங்களும் நிறைந்த ரமேஷ் வைத்யாவின் கற்பனைக் கதைக்கு, ஓவியர் முத்து வரைந்த திகிலூட்டும் படங்களை ஊன்றி கவனித்துப் படித்து, ரசியுங்கள்.