மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும்
உங்களுக்குள் இருக்கும் புத்தருக்கு நான் தலை வணங்குகிறேன் நீங்கள் ஒரு புத்தராகவே இருக்கிறீர்கள் எவருமே வேறு எதுவாகவும் இருக்க முடியாது புத்த நிலையே உங்கள் இருப்பின் மிகவும் சாரமான மையக்கருதுவாகும் இந்த நிலை வருங்காலத்தில் எப்பொழுதோ நிகழ வேண்டிய ஒன்றல்ல அது ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது அதை நீங்கள் உணராமல் இருக்கலாம் இதைப் பற்றி ஒரு போதும் நீங்கள் கனவுகூடக் கண்டிராமல் இருக்கலாம் ஆயினும் அந்த மூலமும் அதுவே இலக்கும் அதுவே புத்த நிலையில் இருந்தே நாம் இயங்குகின்றோம் புத்த நிலையை நோக்கியே நாம் இயங்குகின்றோம் புத்தநிலை என்னும் இந்த ஒரு சொல் வாழ்வின் முழுப் பரிமான வட்டத்தையும் ஆதி முதல் அந்தம் வரையான அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது...........