மனசே மனசே

மனசே மனசே
‘குழந்தைகள் முதல் டீன் ஏஜ் வரை நம் இளைய தலைமுறையின் மனநலப் பிரச்னைகளை அறிந்துகொள்வது எப்படி?’ என இந்த நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார் டாக்டர் சித்ரா அரவிந்த். ஒரு குழந்தை சரியாகத்தான் வளர்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இதற்காக, ஒவ்வொரு பருவத்திலும் அந்தக் குழந்தை எதையெல்லாம் இயல்பாகச் செய்ய வேண்டும் என வரிசைப்படுத்தி கொடுத்திருக்கிறார். குழந்தைகளின் உணர்ச்சி மற்றும் நடத்தைப் பிரச்னைகள், கற்றல் குறைபாடுகள், இயக்கத்திறன் குறைபாடுகள், பேச்சுமொழித்திறன் குறைபாடுகள், ஆட்டிசம் வகை குறைபாடுகள், ஏ.டி.எச்.டி., நடத்தைக் கோளாறுகள், மனச் சுழற்சி நோய், உளத்தூண்டல் கட்டுப்பாடு கோளாறுகள், அறிவுத்திறன் குறைபாடு, அதிர்ச்சி மற்றும் மன உளைச்சல் சம்பவ மனநலக் கோளாறுகள், அனுசரிப்புக் கோளாறுகள், பற்றுதல் கோளாறுகள், குழந்தைகளின் மனச்சோர்வு கோளாறுகள், சீர்குலைக்கும் மனநிலைக் கோளாறு, உண்ணுதல் கோளாறுகள், வெளியேற்றல் கோளாறுகள், தூக்க - விழிப்புக் கோளாறுகள் எனக் குழந்தைகளைப் பாதிக்கும் பிரச்னைகள் நிறைய.
எல்லாவற்றுக்கும் நிஜவாழ்க்கை சம்பவங்களைச் சொல்லி, பிரச்னையின் வீரியத்தை உணர்த்தி, அதற்குத் தீர்வும் சொல்லும் அக்கறையான நூல் இது. ‘குங்குமம் டாக்டர்’ இதழில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்று, இப்போது நூலாகியுள்ளது.