மனம் என்னும் மந்திர சக்தி

மனம் என்னும் மந்திர சக்தி
மேகஸ்செல் மால்டஸ் அவர்கள் எழுதயிது.
நீங்கள் மனம் கலங்கிப் போய் இருக்கிறீர்களா? உங்கள் சுயமதிப்பீடு எப்போதும் உள்ளத்தைவி்ட மிகவும் கீழே இறங்கிவிட்டதா? சந்தர்ப்பங்களைப் போலவே மக்களும் உங்களுக்கு எதிராகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி உங்களுக்குத் தோன்றுகிறதா? நீங்கள் எப்போதும் அமைதியாகவும், இனிமையாகவும் , ஒருமைப்பட்ட மனத்துடனும் விளங்கி, உங்கள் வாழ்க்கையை ஒளிமயமான வெற்றிக் கதையாக்க விரும்புகிறீர்களா? ஆம் உங்கள் வாழ்க்கைகை முற்றிலும் மாற்றியமைப்பதற்கு உத்தரவாதமான, மிக நம்பிக்கையான டாக்டர் மால்டஸ் அவர்களின் வழிமுறையை உங்களுக்கு அளிக்கிறோம் .சுய மதிப்பீடு, உங்களுடைய ஒவ்வொரு நினைவையும் , செயலையும் பாதிக்கிறது என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். ஏழு எளிய மனப் பயிற்சிகள் மூலம் உங்கள் சுய மதிப்பீட்டை உருவாக்கும் பணியை அவர் மேற்கொண்டிருக்கிறார். மனதின் ஆற்றல் மந்திரமாக உங்களிடம் செயல்பட்டு உங்களை முழுக்க முழுக்க மாற்றியமைப்பதை வைத்து, காணுங்கள். உங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைவனாக நீங்கள் ஆவீர்கள்.