மாமரக் கனவு

மாமரக் கனவு
காட்டு மரங்களில் தூக்கணாங்குருவிக்கூடுகள் அழகழகாயத் தொங்கும் . அவை காற்றில் அசைந்தாடும் எழிலே தனிதான். அந்தக் குருவிகள் ஈரமான களிமண் உருண்டையைக் கொண்டு வந்து ஒவ்வொரு கூட்டிலும் ஒட்ட வைக்கும் .இரவில் குஞ்சுகளுக்கு வெளிச்சம் தேவைப்படுவதால் இரவில் பறந்து திரியும் மின்மினிப்பூச்சிகளைப் பிடித்து வந்து தாய்பறவை அந்தக் களிமண்ணில் ஒட்ட வைத்துவிடும். பொலுபொலுவென இருட்டில் வெளிச்சம் தரும் அந்தப் பூச்சி . வீட்டுக்கு ஒளி தேவை எனடபதை முதன் முதலில் கண்ட உயிரினம் தூக்கணாங் குருவி என்று கருதுகிறேன். மனிதன் இதைப் பார்த்துத்தான் விளக்கை உருவாக்கி இருக்க வேண்டும். பலவித அறிவியல் சாதனங்களோடு மனிதன் விதவிதமாக வீடுகளை அமைக்கிறான். எனினும் தூக்கணாங் குருவிக்கூடு போல ஒன்றை அவனால் கட்ட முடியுமா? கீச்கீச் சென்று கத்திக்கொண்டு உள்ளே நுழையும்போது வெளியே வரும்போது கூடுகள் காற்றில் ஆடுவதில் தாலாட்டின் லயம் இருக்கும்.இதை உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் பொறுமையாகக் கவனித்தால் நிறைய புரிந்து கொள்ளலாம்.