மலையனூர் மாகாளி
மலையனூர் மாகாளி
மண்வாசனை, மண்ணின் மைந்தன் என்றெல்லாம் சொல்கிறார்களே, அதெல்லாம் சும்மா இல்லை. மண்ணுக்கென்று ஓர் ஈர்ப்பு சக்தி உள்ளது.ஒவ்வோர் அமாவாசையின்போதும் லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்னகத்தே வரவழைக்கும் சக்தி இந்த மேல்மலையனூர் மண்ணுக்கு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், பாண்டிச்சேரி,கர்நாடகம் போன்ற அண்டை மாநில பக்தரெல்லாம் அணிவகுத்து வருகின்றனர் அன்னை அங்காளம்மனின் திருமுகம் காண! மேல்மலையனூரின் மகிமை திக்கெட்டும் பரவி அருள்மணம் வீசுகிறது. எங்களை ஆட்டுவிக்கும் தீயசக்திகளை அடித்து விரட்டுகிறாள் எங்கள் அங்காளம்மா - உணர்ச்சிப் பெருக்கோடு கூறிடும் ஒவ்வொரு பக்தரின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தின் பிரகாசம். அம்மனின் புராணம், ஐதீகம், வழிபாட்டு முறைகளை விளக்கிக் கூறுவதுடன் உங்களை அந்தத் திருத்தலத்துக்கு விரல் பிடித்து அழைத்துச் செல்கிறது இந்நூல். மண்மணம், தமிழ் மணம் கமழும் பக்திப் படையல் இது
மலையனூர் மாகாளி - Product Reviews
No reviews available