மலைகள் சப்தமிடுவதில்லை

மலைகள் சப்தமிடுவதில்லை
எழுத்து வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள்.இந்த உலகில் கனவுகள, வாதைகள் , கசப்புகள்.ஆச்சரியங்கள், அழிக்கமுடியாத பதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்கள்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கட்டுரைகள் ஆழமான கேள்விகளையம் உரையாடல்களையுதம் வாசகனின் மனதில் உருவாக்குகின்றன.
தினசரி உலகம் வாழ்க்கையை மிகுந்த நெருக்கடிக் குள்ளாக்கும் போது இலக்கியம் அதிலிருந்து மீள்வதற்கான வழியைக் காட்டுகிறது. இலக்கியமும் இசையும் கலைகளும் இல்லாமல் போனால் மனிதர்கள் வெற்றுச் சக்கை போலாகி விடுவார்கள். தனது வாழ்க்கை, வாசிப்பு, பயணம் இந்த மூன்றின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் பெற்ற அனுபவங்களை இக்கட்டுரைகளின் வழியே சிறப்பாகப் பகிர்ந்து தந்திருக்கிறார். இடையுறாத தேடலும் வேட்கையும் கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்.