மகளிர்தினம் உண்மை வரலாறு

மகளிர்தினம் உண்மை வரலாறு
ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க, மனிதர்கள் கௌரவமாக மனிதர்களாக வாழ வகை செய்யும் சமூகத்தை படைக்க மார்க்சும்,லெனினும் காட்டிய பாதையில் செல்ல வேண்டியதை அறிவுறுத்த வேண்டிய தினம் ஆகும். கடந்த காலத்தில், பெண்களின் உரிமைகளுக்காக , உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்களையும், அவற்றிக்கான போராட்டங்களில் உயிர் தியாகம் செய்தவர்களையும் நினைவு கூற வேண்டிய தினம் ஆகும்
– பேராசியர் ஆர். சந்திரா.
80 பக்கங்களைக் கொண்ட இந்த சிறிய நூல், சில வரலாற்று பிழைகளை சுட்டிக்காட்டுகிறது. கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை புறந்தள்ளும் நோக்குடன் வரலாறு திரித்து எழுதப்பட்டதை நூலாசிரியர் விளக்குகிறார். மகளிர் தினம் என்பது சோஷலிச வரலாற்று பின்னணியைக் கொண்டது. அதை நூலாசிரியர் அழுத்தமாக, போதிய ஆதாரங்களுடன் தெளிவு படுத்தி உள்ளார்.
ரஷ்யாவில் 1917 மார்ச் 8 அன்று பெண்கள் தொடங்கிய புரட்சி தான் சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட உண்மையான காரணம்.