மகளிர் மட்டும் (எழுத்து பிரசுரம்)

மகளிர் மட்டும் (எழுத்து பிரசுரம்)
அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமயம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, வெகு காலத்துக்குக் கருதப்பட்டு வந்திருக்கிறது.
அதே சமயம் உலகில் தோன்றிய ஒரு பெண்மணி தான் முதல் பகுத்தறிவுவாதியாகவும் இருந்திருக்கிறாள். ஆண் இல்லை!
சந்தேகமாக இருக்கிறதா?
தாம் வாழ்ந்த காலத்தில் தாம் சம்பந்தப்பட்ட துறையில் நிகரற்ற சாதனை படைத்த பெண்களை இந்தப் புத்தகத்தில் சந்திக்கப் போகிறீர்கள். அத்தனை பேருமே சந்தேகத்துக்கு இடமில்லாத சாதனையாளர்கள். ஆயிரம் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சோதனைகளையும் தாண்டிக் கடந்து வெற்றிக்கொடி கட்டியவர்கள்.
இவர்களைத் தவிர்த்துவிட்டு மனித குலத்தின் எந்த ஒரு வெற்றியும் சாத்தியமாகியிருக்க வாய்ப்பே இல்லை.