மாற்றம்

மாற்றம்
மனித வாழ்க்கைல முக்கியமான காலகட்டம்னா அது 19 - 25 வயசுனுதான் சொல்லணும்,
எந்த கவலைகளும் இல்லாத கல்லூரி நாட்கள், வாழ்நாள் நட்பு, ரம்மியமான முதல்
காதல்னு ரொம்ப அழகான நாட்கள அவ்வளவு சாதரணமா யாராலையும் மறந்திட முடியாது.
ரொம்ப அழகான கல்லூரி நாட்கள விட்டு வெளிய காலடி எடுத்து வச்சா, வாழ்க்கை
தன்னோட உண்மையான முகத்த காட்ட ஆரம்பிச்சிடும், புது வேலை, புது இடம், மனசு
நிறைய கனவுகள், நினைச்சது ஒன்னும், கிடைக்கிறது ஒன்னுமான வாழ்க்கை புதுசா ஒரு
அனுபவத்த, பாடத்த கத்து குடுக்க தயாரா காத்துகிட்டு இருக்கும்.
அந்த ரம்யமான கல்லூரி நாட்கள தன்னோட முதல் காதலோட இனிமையோட அனுபவிச்சிக்கிட்டு
இருக்க நவீன். மறுபக்கம், Software வாழ்க்கை, பொண்ணுங்க நட்பு, புது உறவுகள்,
சில தோல்விகள், மனசுல புதஞ்சி போன ரகசியங்கள், கனவுகள்னு வாழ்ந்துகிட்டு
இருக்க பிரசாத்.
இவங்க இரண்டு பேர் வாழ்கையிலும் எதிர் பாரா விதமா நடக்குற சில திருபங்களினால்
இவங்க வாழ்க்கை பாதை எப்படி மாறுது?
நவீனோட காதல், பிரசாத்தோட கனவு இது இரண்டும் நிறைவேறுமா??
மாற்றம், இரண்டு இளைஞர்களின் வாழ்வினில் நிகழும் மாற்றங்களின் சுவாரசியமான
தொகுப்பு, இது பலரின் வாழ்வினில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டு இருக்கும்
சம்பவங்களின் உண்மை தொகுப்பு .