லண்டன் டயரி
லண்டன் டயரி
லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்தகத்தின் ஒரு முகம். மதுரை தெற்கு மாடவீதி, ரங்கநாதன் தெரு, மெரினா பீச், அண்ணா சதுக்கம் - நமக்குத் தெரியும். பக்கிங்ஹாம் அரண்மனை, ஈஸ்ட் ஹாம் கடைவீதி, கென்சிங்டன் பூங்கா, பிக்கடிலி சதுக்கம் - இவை தெரியுமா? தான் சென்று உணர்ந்த லண்டனை தன் எழுத்தின் வழியே காட்சிப்படுத்தி, ஒரு தேர்ந்த டூரிஸ்ட் கைட்போல நம் கண்ணில் கொண்டு வருகிறார் இரா. முருகன். அவரது எழுத்து ‘லண்டன் ஐ’ மேல் ஏறி நின்றால் கிடைக்கும் ஏரியல் வியூவையும் சாத்தியப்படுத்துகிறது. கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிக்பென் கோபுரக் கடிகாரம் காட்டும் நேரத்தையும் நமக்கு உணர்த்துகிறது. இது புத்தகத்தின் இன்னொரு முகம். தினமணி கதிரில் வெளிவந்து வாசகர்களின் நினைவில் நிலைத்த தொடரின் நூல் வடிவம். உதடு விரிந்த புன்னகை குறையாமல் லண்டனின் சரித்திரத்தை உள்வாங்கவும், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே லண்டனின் குளிரை உணரவும் செய்கிறார் இரா. முருகன்.
லண்டன் டயரி - Product Reviews
No reviews available