குட்டி ரேவதி கவிதைகள் -தொகுதி 2

Price:
550.00
To order this product by phone : 73 73 73 77 42
குட்டி ரேவதி கவிதைகள் -தொகுதி 2
குட்டி ரேவதி கவிதைகள், சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன; கோபம் கொள்கின்றன; வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும் போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றால் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது
சொல்லிணைகளும், மின் தெறிப்பாய்த் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவு கூருமாறு செய்கின்றன.