குற்ற விசாரணை
குற்ற விசாரணை
தமிழில் - நாகரத்தினம் கிருஷ்ணா
மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. அவன் லெ கிளேசியொவிடம் கண்விழிக்கையில் நாவல் பிறந்திருக்க வேண்டும். நம்மிடம் முடிவற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேஸியொ அதனை ‘குற்ற விசாரணை’யை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார். 1963இல் கிளேசியொவின் முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ வெளிவந்தபோது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது. ரெனெடோ இலக்கிய விருதை நாவலுக்கு அளித்து 23 வயது இளைஞரை உற்சாகப்படுத்தினார்கள். 2008இல் பெற்ற நோபெல் பரிசுக்குப் பிறகுங்கூட அவர் பெயரோடு சேர்த்து உச்சரிக்கப்படும் நாவல் ‘குற்ற விசாரணை’.
லெ கிளேஸியொ
லெ கிளேஸியொ (பி. 1940) “இந்தியர்களும் பிறரும் உலகில் உன்னதமான மக்கள். மாறாக, வெள்ளையர்களும் மேற்கத்தியர்களும் கொடியவர்கள்,” என்ற J.M.G. லெ கிளேஸியொ ஒரு தேசாந்திரி. பெற்றோர் பதினெட்டாம் நூற்றாண்டில் மொரீஷியஸ் தீவில் குடியேறியவர்கள். தன்னை இன்றளவும் ஒரு மொரீஷியஸ் குடிமகனாகத்தான் கருதிவருகிறார். இவருடைய படைப்புகள் ‘Nouveau Roman’ என்ற வகைமைக்குள் வருபவை. விளிம்புநிலை மக்களை மையத்திற்குக் கொண்டுவரும் முனைப்பும் இயற்கைச் சீரழிவு குறித்த அச்சமும் இவரது படைப்பின் முக்கியக் கூறுகள். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் கால்வைத்து நடப்பதையொத்த அனுபவத்திற்குக் கைகாட்டுபவர் கிளேசியொ. சிறுகதை, நாவல், கட்டுரை, சிறுவர் இலக்கியமென ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இவரது எழுத்தாற்றலைத் தெரிவிப்பவை. இருப்பினும் 1963இல் வெளிவந்த முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ (Le Procés-verbal) இன்றளவும் உலகின் முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல பதிப்புகள் கண்டுவருகிறது. இந்நாவலுக்கு பிரெஞ்சு இலக்கிய உலகின் அதிமுக்கிய ‘கொன்க்கூர் பரிசு’ கிடைத்தபோது கிளேசியொவிற்கு வயது 23. பரிசளித்தவர்களின் முடிவு நியாயமானதுதான் என்பதை 2008இல் இவருக்குக் கிடைத்த நோபெல் பரிசு உறுதிசெய்துள்ளது.
குற்ற விசாரணை - Product Reviews
No reviews available