குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!

குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
உலகின் மூத்த மொழி என்றதும்... வாக்கிங் ஸ்டிக் பிடித்து வருகிற சீனியர் சிட்டிஸன் லிஸ்ட்டில் தமிழைச் சேர்த்துவிடக்கூடாது. டாலடிக்கிற இளமை கொஞ்சமும் குன்றாமல், பார்ப்பவர்களைக் கிறங்கடிக்கிற, ஈர்த்து இழுக்கிற செம்ம யூத் செம்மொழி, நம் தமிழ்மொழி. அதனால்தான், நம்மொழியின் சீரிளமையைக் கண்டு பிரமித்துப்போய், திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்தியிருக்கிறார் மனோன்மணியம் பெ. சுந்தரனார். இப்படி ஒரு மூத்த, இளம்மொழியை இன்றைய இளைய / இணைய தலைமுறைக்கு எப்படி அறிமுகப்படுத்துகிறோம்? பாடப்புத்தகங்களில் இருக்கிற இலக்கணக் குறிப்புகளை படிக்கும்போதே, ஸ்லீப்பிங் டோஸ் எஃபெக்ட் ஏற்படுகிறதில்லையா?
இலக்கணம் படிப்பதை தண்டனையாக நினைக்கிற நவீனயுக இளைஞர்கள் மனதுக்குள், நம் தமிழை ஆழமாக அமர்த்த வேண்டுமென்றால்... அவர்களுக்கே உரித்தான அல்ட்ரா மாடர்ன் டிரெண்டி ஸ்டைலில் சொல்வது தானே சரியாக இருக்கும்? அப்படி ஒரு முயற்சியே... ‘குறிஞ்சி to பாலை... குட்டியாக ஒரு டிரிப்’.இது, தமிழ் கற்றறிந்த ஆசான்களுக்கான புத்தகம் அல்ல. தமிழை, அதன் மரபான பொக்கிஷங்களை, பெருமைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான துவக்கநிலைக் கையேடு..