கொதிக்குதே... கொதிக்குதே...
கொதிக்குதே... கொதிக்குதே...
நாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப நிலை இருந்து வருகிறது. தட்பவெப்பம் என்றால் என்ன? ஓர் இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சராசரி வானிலை அளவுதான் தட்பவெப்ப நிலை எனப்படுகிறது. மழைப்பொழிவு, சூரியஒளி, காற்று மற்றும் அதன் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவை தட்பவெப்ப நிலையை தீர்மானிக்கின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றமே காலமாற்றம். இந்த காலமாற்றமானது நீண்டகால மாற்றமாக நிகழ்ந்து வருகிறது. அதாவது கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம் என காலமாற்றம் நிகழ்கிறது. இந்த காலமாற்றத்திற்கு ஏற்றவாறு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால், தற்போது மனித செயல்பாடுகளின் காரணமாக காலநிலை மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருகிறது. இதன்காரணமாக கோடைமழை தள்ளிப்போகிறது. வெயில் கொளுத்துகிறது. மனிதனுடன் தொடர்புடைய இயற்கைக்-கு எதிராக எதுநடந்தாலும் அது மனிதகுலத்திற்கு எதிரான அழிவுக்கு வழிவகுக்கும். தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் புவி வெப்பமடைகிறது. புவி வெப்பமடைவதால் அரிய தாவரங்கள் அழியும். இதனால் என்ன நடக்கும்? பூமிக்கு வரக்கூடிய பேராபத்தை இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் நம்மை எவ்வாறு பாதிப்படையச்செய்கிறது என்பதை எச்சரிக்கை உணர்வோடு சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன். புவி வெப்பமாவதில் இருந்து மனிதன் தன்னையும், தான் வாழும் உலகையும் காத்துக்கொள்வது எப்படி? சூழல்கேட்டினால் உருவாகியுள்ள அபாயத்தில் இருந்து மனிதகுலம் மீள்வது எப்படி? நம்மைக்காத்து வரும் இயற்கையைப் பாதுகாப்பது எப்படி? என பல்வேறு கேள்விகளுக்கு விடைசொல்கிறார் நூலாசிரியர். அடிப்படையில் பத்திரிகையாளரான ஆதி வள்ளியப்பன் சிறந்த சூழலியல் ஆர்வலர். நம் வாழும் சூழலை காப்பதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக கொதிக்கும் பூமியை சமூகப்பார்வையோடு படைத்திருக்கிறார். கொதிக்கும் பூமியை படியுங்கள்! வாழும் சூழல் பற்றிய விழிப்பு உணர்வை பெறுங்கள்!
கொதிக்குதே... கொதிக்குதே... - Product Reviews
No reviews available