கவிக்கோ கவிதைகள்

0 reviews  

Author: அப்துல் ரகுமான்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  750.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கவிக்கோ கவிதைகள்

"வானம்பாடிக் கவிதைக் குணத்திலிருந்து நான் முற்றிலும் வேறானவன் " என்று பால்வீதியின் மூலம் பதிவு செய்திருக்கிறார். 'கவிதை' குறித்த நவீனத்துவத்தின் கருத்தாக்கத்தை முழுமையாய்க் குருதியில் ஏற்றிக் கொண்டவராக வெளிப்பட்டுள்ளார்; 'கவித்துவத் தாகம்' தவிர வேறொன்றும் பெரிதல்ல என்கிற முறையில் இயங்கியிருக்கிறார். மீமெய்மையியல்(சர்ரியலிசம்) எழுப்பிய வசீசுரத்தில் வசியமாகி' படிமம், குறியீடு என மூழ்கியிருக்கிறார்.

நவீனத்துவம், அக்கறை கொண்ட பிரதியைச் செம்மைப்படுத்துதல். "கவிதை கவிதையாக வந்து விழுந்திருக்கிறதா" என்பவற்றிலேயே கவனம் செலுத்தி வார்த்தைகளைச் செதுக்கி விநோதமான முறையில் C*sigma*ye தமிழ்க்கவிதை வெளியில் அத்தொகுப்பு மூலம் பெருஞ்சலனத்தை ஏற்படுத்தினார். "என் கவிதைகளிடம் கவித்துவத்திற்காக மட்டுமே நெருங்குங்கள்; உங்கள் கேடுகெட்ட சமூகத்தின் அன்றாடத் தேவைக்காகப் பக்கத்தில் வந்துவிடாதீர்கள்" எனத் துணிச்சலான ஒரு விண்ணப்பத்தோடு வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் க.பஞ்சாங்கம்