கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
கஷ்மீரின் பல்வேறு முகங்கள் கொண்ட தேசியத்தை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்தநூல் கஷ்மீரிகளை, கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள, கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுபூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது.
அஃப்ஸல் குருவின் கதை உணர்வுபூர்வமாக இந்த நூலில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு டாக்டர் ஆகி தனது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கனவுகண்ட ஒரு மாணவனின் வாழ்வு, கனவு எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பதை நாம் அறியும்போது விம்முகிறோம். குறிப்பாக அஃப்ஸல் குரு – தபஸ்ஸும் காதலும், வாழ்வும் கவித்துவம் மிக்கதாக நம்முன் விரிகிறது. இந்தப்பகுதியில் நந்திதா ஹக்ஸரின் எழுத்து நடையும் கவிதாவடிவம் கொள்கிறது. அஃப்ஸல் குருவின் எதிர்பாராத, தூக்கிலிடப்படும் முடிவு நம்மை உறைய வைக்கிறது.
இந்திய-கஷ்மீர் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கின்ற மதவெறி உணர்வுகள் இந்தத் துணைக்கண்டத்தையே நிம்மதியிழக்கச் செய்து வருகின்றன. மதவெறியும், தீவிரவாதமும் – அது பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையோ மக்களின் ஒற்றுமைக்கு எல்லையில்லா தீங்குகளை ஏற்படுத்தி வருகின்றன. இவை அனைத்தையும் தனக்கே உரிய அனுபவத்தோடும், லாவகத்தோடும் விவரிக்கிறார் நந்திதா ஹக்ஸர்.
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் - Product Reviews
No reviews available