கற்பனைக்கும் அப்பால்
சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களில் இதுவும் ஒன்று.அறிவியல் என்பது என்ன என்ற விளக்கத்தில் துவங்குகிறார்.கடந்த நூற்றாண்டின் மகத்தான அறிவியல் சாதனைகளை பட்டியலிடுகிறார்.பிரபஞ்சம் எப்படி தோன்றியது, கடவுள் பற்றிய சிந்தனைகள் என்று சுஜாதாவின் கட்டுரைகளின் வீச்சு பிரமிக்கத்தக்கது.சுஜாதா தற்போது சென்னையில் வாழ்கிறார். திரைப்படங்களிலும் தமிழ் சார்ந்த கணிப்பொறியியலிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.